அய்யோ எம் பேத்தி பேரு குண்டா- வாம்

அய்யோ எம் பேத்தி பேரு குண்டா- வாம்

ஏண்டா கருமலை, வெளிநாட்டில இருக்கற உம் பொண்ணுக்கு கொழந்தை பொறந்திருக்குதாமே?
😊😊😊😊😊
ஆமாம் பொறந்திருக்குது. அதப்பத்தி இப்ப பேசாத. நானே வயித்தெரிச்சலில் துடிச்சுட்டு இருக்கறேன்.
😊😊😊😊😊
ஏண்டா கருமலை உம் பெரிம்மாகிட்ட ஒரு சந்தோசமான தகவலைக்கூடச் சொல்லமாட்டாயா?
😊😊😊😊😊
பெரிம்மாக் கெழவி. கொஞ்சம் வாய மூடிட்டு இரு.
😊😊😊😊😊
எப்பவும் சந்தோசமா இருக்கற நீ, இன்னைக்கு ஏண்டா கடுகடுப்பா இருக்கற?
😊😊😊😊
எம் மவ மலர்விழியை பெரிய படிப்பா படிக்க வச்சேன். அவளுக்கு பொருத்தமான பையனைக் கல்யாணம் பண்ணி வச்சேன். ரண்டு பேரும் ஜெர்மனி நாட்டில வேலை பாக்கறாங்க. நாமெல்லாம் இங்க நம்ம பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கறமாதிரி எம் மவளும் மருமவனும் எம் பேத்திக்கு ஜெர்மானிய மொழில இருக்கற ஒரு பேர வச்சுட்டாங்க பெரிம்மா.
😊😊😊😊😊😊
சரி அந்தப் பேரு என்னன்னு சொல்லுடா கருமலை.
😊😊😊😊😊
அய்யோ நான் என்னத்த சொல்லுவேன். எப்பிடிச் சொல்லுவேன். என்னோட அழகான பேத்தி பேரு 'குண்டா' -வாம். நம்ம ஊருக்கு எம் பேத்தி வந்தா எல்லாம் அவள அண்டா குண்டான்னு கிண்டல் பண்ணுவாங்களே. நான் என்ன செய்வேன் பெரியம்மா.
😊😊😊😊😊😊
உனக்கு புத்தி கெட்டுப் போச்சுடா கருமலை. நாம இங்க அர்த்தம் தெரியாத சிரிப்பைத் தரக்கூடிய இந்திப் பேரையெல்லாம் வைக்கறதில்லையா? அதுமாதிரி தான் இந்த 'குண்டா' பேரும். இதுக்கெல்லாம் கவலைப்படாதடா கருமலை.
😊😊😊😊😊
பெரிம்மா, நீ சொல்லறதால நா மனசத் தேத்திக்கிறேன்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ் உணர்வைத் தட்டி எழுப்ப.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Gunda=war, battle
( Gunda is of German, Norwagian origin)


Close (X)

5 (5)
  

மேலே