வாழ்க்கையின் அனுபவ மணியோசை

பணமே உலகமென போகுதப்பா மாக்களின் வாழ்க்கை...
அதையே பின்பற்றி வாழ்ந்தால் வழுக்கிவிடுமப்பா வழுக்கை...
வலுவை பெற்று தனித்துவமாய் வாழவே வேண்டுமப்பா நம்பிக்கை...
நம்பிக்கையிழந்த வாழ்க்கையும் ஒப்பாகுமப்பா தும்பிக்கையிழந்த யானையின் வாழ்க்கைக்கு...

வெற்றுக் காகிதமாகிய பணக்கட்டு உன் கையில் உள்ளவரை இனிப்பு பண்டத்தை மொய்க்கும் ஈக்களின் கூட்டமாய்,
உணவைக் கண்டு கூடும் காகங்களின் கூட்டமாய் உன்னைச் சுற்றி கூடியிருந்திடும் உறவுகளின் கூட்டம்...
கேளிக்கையே அக்கூட்டத்தின் வாடிக்கை...
உன்னிடமுள்ள செல்வம் தீர்ந்து போகும் போதிலே கட்டிய மனைவியும் உன்னோடு வாழ உடன்படாள்...
பெற்றெடுத்த பிள்ளையும் தூக்கியெறியும் குப்பை மேட்டிலே...

நல்ல குணத்தையே பெரிதாய் எண்ணி நல்ல நண்பன் துணைவருவான் ஆன்மாவினால் பிணைக்கப்பட்டவனாய்...

சந்நியாச கீதம் பாடவே வலியுறுத்துகிறது இந்த வாழ்க்கையின் அனுபவ மணியோசை...

வறுமையிலும் வாடாது,
ஏழ்மையிலும் ஏமாற்றாமல் வாழும் துணிவை நித்தமும் நமக்கு வழங்கிடும் இறைமையின் உண்மை உணரும் தருணமே இறைவனுடன் கலந்த இறைவனின் அடிமையாய் முழுச் சுதந்திரமடைந்து அகிலத்தின் நன்மைக்காகவே பணியாற்றுவோம் உத்தமர்களாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Jul-17, 6:41 pm)
பார்வை : 656

மேலே