நிழலாடும் நினைவு
வல்லரசாய் ஆக்கவேண்டி;
வருமானத்தில் கைவைக்கும் !
வியர்த்தாலும் வரி கட்ட ;
விதவிதமாய் புது சட்டம் !
கண்மூடி கண்திறந்தாலே ;
கன்னத்திலே கைவைத்து !
கவலையிலே முழ்குவதே ;
தொடர்கதையாய் ஆகிறதே !
எளியவன் ஏக்கத்திலே !
வலியவன் விரக்தியிலே !
பாயும் இந்த சட்டமெல்லாம் ;
பாதாளம் வரைதனிலே !
சந்தோஷம் கூட இப்போ ;
சாஷ்டாங்கம் ஆனதுவே !
வாய்விட்டு சிரித்தாலும் ;
வரிகட்ட வேண்டுமோன்னு ?
நினைவுகளை மட்டும் நெஞ்சில் ;
நிழலாட விட்டு விட்டு ;
நிம்மதியை தேடி நெஞ்சம் ;
நித்தம் நித்தம் தவிக்கிறதே !