கூறையின் உள்ளே நிலவு

ஏழைக் காதலன்
****************

ஏழ்மை மீதுக் காதல் கொண்டவளே
இந்த ஏழையைத் தேடி ஏழையின் இல்லத்தின்!
கூறையில் உள்ள துவாரத்தின் வழியே
நுழைந்து என்னைக் "காண" வந்தவளே~உன்
தந்தை உறங்கியதும் இரவின் நிலவாக......நீ!

பகலில் உன் தந்தைச் சூரியனாய் இங்கு வந்துச் செல்வதுப் புரியவில்லையா? உன் தந்தையின் உக்கிரத்தில் இந்த இல்லமே எரிகிறதேத் தெரியவில்லையா .........

சூட்டில் எரியுதடி! இரன்டு சாதிகளாக ஏழைப் பணக்காரனாக நம்மைப் பிரிக்குதடி......
கூறை வீடும் பற்றி எரியவே!
அன்பு உல்லம் கொண்டத் தென்றலே
உன்னை மறந்து என்னை நினைத்து!

நண்பர்களை மேகமாகக் கூட்டி!
உன் தந்தையை மறைத்து.....
தோழியிடம் உன் அன்புக் காதலை மழையாக தூது அனுப்பி! என் இல்லத்தையும்!
இதயத்தையும்! துவாரத்தில் நுழைந்துக்"குளிர"வைத்துவிட்டாயே!
உன் அன்பு மழைச் சொட்டச் சொட்டவே........

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Jul-17, 7:52 am)
பார்வை : 107

மேலே