நீ என் காதல் வானம்
தூவுகின்ற வானம் தூவானம்
மேவும் காதல் வானம் மாலை வானம்
முகில் சூழும் வானம் நீலவானம்
முற்றும் பொழியும் வானம் மழை வானம்
சித்திரம் தீட்டும் வானம் செவ்வானம்
நித்திரை கலைத்து துயில் எழுப்பும் வானம் கீழ்வானம்
நெற்றி நிலவு தவழும் வானம் நின் முகவானம்
நெஞ்சமெல்லாம் நிலவொளி வீசும் நீ என் காதல் வானம் !
----கவின் சாரலன்