அகிம்சைக் காதல்

வீரன் இங்கே வீழ்ந்துக் கிடக்கிறேன்
**********************************
அச்சம் என்னைச் சூழவே
அச்சப்பட்டுக் கிடக்கிறது என்னைக் கவர்ந்தவளைக் "கவர" நான் எழுதிய வாழ்த்து மடல்கள்!

அச்சம் தான்........
என்னைக் கண்டோ என்னைக் கவர்ந்தவளைக் கண்டோ அல்ல நரம்பில்லாச் சில
நாவினைக் கண்டு!

என் அறையின் இழுப்பறையின் கருவறையில்
உறங்குகின்றது என் உணர்வுகள் சில!

அவள் கைகளில் தவழாதச் சில
வாழ்த்து மடல்கள் என் கண்ணீரில் நனைந்து
என் அறைக் கல்லறைக் குப்பைத் தொட்டியிலே!

அறை முழுவதும் உன் வாசம்
ஏகாந்தத்தில் என் நெஞ்சமும் அழுதுப் பேசும்!
முகம் பார்க்கும் கண்ணாடியும் கண்ணீர்க் கலங்க!

இது அகிம்சை வழிக் காதல் அல்லவா!
அழுதுப் புலம்புகின்றது........

வீரனாக இருந்தும் வீழ்ந்துக் கிடக்கிறேன்
காலதர் அருகே ஏங்கிக் கிடக்கிறேன்!
குறிப்பேடும் குழம்பித் தவிக்க
மீண்டும் உனக்கு மடல் கிறுக்கும் என்
தூவல்............
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (12-Jul-17, 10:04 am)
பார்வை : 271

மேலே