நிலவும் காதலியும்
அழகு முழு நிலவாய் பௌர்ணமியாய்
முக்கால் நிலவாய், ,அரை நிலவாய்,
பின்னர் மூன்றாம் பிறையாய், தேய் பிறையாய்,
முழுவதுமாய் மறைந்து, பின்னர் மீண்டும்
முழுநிலவாய் வலம் வருகிறாய் நிலவே
உனக்கு ஏன் இந்த பச்சோந்தி வேடம்
ஒளிந்தும் ஒளியாமையுமாய் இருத்தல் ?
அந்த ஆதவனைக் கண்டு பயந்து ஒளிந்துகொள்கிறாயா ?
இல்லை மந்த மருதம் உன்னை விழிக்கிவிடுமா
என்ற பயமா தெரியலையே ............நிலவே
என்னவளைப் பார் அவள் மாசிலா முகத்தைப் பார்
அவள் வதனம் நிலவே மற்றோர் நிலவோ நீயே சொல்
ஆனால் அவள் எப்போதும் ஒளிரும் நிலவு
பூரண நிலவு ;தேய்வது என்பது ஏதும் இல்லா
என் காதல் நிலவு, மண்ணில் நிலவும் பெண்ணிலவு