அன்பின் அரவணைப்பு---பஃறொடை வெண்பா---

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :


வெண்பனி நீர்த்துளி மென்தளிரில் வீழ்வதாய்த்
தண்மல ராய்விரியும் தாய்மடியிற் பொற்குழவி
தண்ணீரோ டொன்றிடும் தாமரை நேசமாய்
கண்ணிடை வைத்துக் கணப்பொழுதும் நீங்காது
மண்ணில் அரவணைக்கும் அன்பு......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Jul-17, 12:17 pm)
பார்வை : 667

மேலே