உனக்காக இந்தப் பூ

காத்திருந்த பொழுதுகள் கனவாகி விட்டதுவோ?
கன்னக்குழி அழகு கண் மறைந்து போனதுவே
உன்னாலே என்நெஞ்சம் உருகுதடா சிதையுதடா
உன்னுறவை நினைத்திங்கே என்நாட்கள் செல்லுதடா
கனிஇங்கே பழுத்திருக்கு கனநாளாய் காத்திருக்கு
கரும்பு இங்கு மூத்திருக்கு கைக்கூலி உனக்கெதற்கு
கன்னியிவள் ஏக்கமிங்கு காட்டாறாய் ஓடுதடா
கண்ணாளா உன் வரவை கன்னி மனம் நாடுதடா
எத்தனைநாள் பாத்திருப்பேன் ஏக்கமுடன் காத்திருப்பேன்
என்மனதை நிறைத்திருக்கும் எழில்வதனப் பூமுகமே
என்முகம் காணஇங்கு எழுந்துவர வேண்டாமா
என் சோகம் போக்கிவிட ஓடிவர வேண்டாமா

அஸ்லா அலி

எழுதியவர் : aslaaali (12-Jul-17, 12:42 pm)
பார்வை : 449

மேலே