காதல்

உன்னைப் பார்த்த போதே
நீ தான் என்னவள் என்று
மனதில் உன்னை வரித்துவிட்டேன்
தினம் தினம் உன் தரிசனத்திற்கு
ஏங்கி நிற்கின்றேன்; நீயோ
ஏனோ பாராமுகமாய் இருக்கின்றாய் !
என்னை பெரும் காதல் நோய்க்கு தள்ளிவிட்டாய்.

பெரும் நோய்களுக்கு சுக்கு
அருமருந்தென்பார் வைத்தியர்கள்,
கண்ணே என் காதல் நோய்க்கு
உன் கடைக் கண் பார்வைதான்
அருமருந்து ; இன்னும் என் இறங்கவில்லை
வஞ்சியே! உன் வேல்விழிப் பார்வையை
என் பக்கம் செலுத்திடுவாய்
என் மனக்கண்ணை திறந்து அதில்
வந்து அமர்ந்திடுவாய் தேவி
என் காதல் நோய் தீர்க்கும்
காதலியாம் அருமருந்தாய் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-17, 9:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 319

மேலே