செல்லக்கோப அழகி
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கு பிடித்த கருப்பு வண்ண சுடிதார் !
எனக்கு பிடித்த ஜிமிக்கிகள் !
எனக்கு பிடித்த கைக்கடிகாரம் !
எனக்கு பிடித்த பின்னல் இடாத கூந்தல் !
சண்டையிட்ட காரணத்தால்
உன் கோபங்களை என் மீது கொட்டி தீர்க்க
வந்திருக்கிறாயா !
நான் உன்னை கொஞ்சியே "கொல்ல" வேண்டும்
என்பதற்காய் வந்திருக்கிறாயா !
என்பதுதான் என் உச்சகட்ட குழப்பம் ?