சுத்தம் சாப்பிடவிடாது

ஒரு சுமாரான இலவச ஆடம்பர பொருட்கள் மட்டும் உள்ள ஓலைக் குடிசை இறந்து போன அம்மாவின் படம் ஆங்காங்கே துணிகள் ஏனோதானோ என சுத்தம் செய்யப்பட்ட தரை அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது 10வது படிக்கும் மணி டீவியில் குத்துச்சண்டை பார்த்துக் கொண்டிருந்தான் வேறு சேனல் மாத்தச் சொல்லி அடம்பிடிக்கும் 8வது படிக்கும் தம்பி ராஜா டீவி முன்பு நின்று கொண்டான் அவனை சோறு வடிக்க போகச் சொல்லிவிட்டு குத்துச்சண்டையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான். கனவு மட்டுமே காணமுடியும்னு தெரியாத மணி தான் ஒரு குத்துச்சண்டை வீரனாகனும்னு கனவு கண்டான் கனவு மட்டும் காணாது அதுக்காக என்ன செய்யனும்னு அவனுக்கு தெரிஞ்ச எல்லாருட்டயும் கேட்டும் யாருக்கும் சரியா தெரியாத கிராமம். கிரிக்கெட் பத்தி கேட்டா எல்லாரும் சொல்றாங்க ஆனா குத்துச்சண்டை னா எல்லாருக்கும் தெரியும் அதுக்கு என்ன பண்ணணும்னு ஒருத்தனுக்கும் தெரியலனு நொந்து கொண்டே பாத்துகிட்டு இருந்தான்.பீடி புகை வாசனையுடன் போதையில் தள்ளாடியபடி கையில் ரோட்டுக்கடை சால்னாவுடன் மாசானம் உள்ளே நுழைந்தான் டேய் மணி இந்தாடா சால்னா சாப்புடுங்கனு சொல்லிட்டு பாய தேடினான். அப்பா நீ சாப்பிட வரலயா என்றான். இன்னைக்கு நெறய வேலை சாப்பாடு கண்டிப்பா உள்ள போகாது நீங்க சாப்புட்டு படுங்கனு சொல்லி கண் மூடினான்.காலை 7 மணிக்கு மணியும் ராஜா எழுந்து வேலைக்கு சென்ற அப்பாவின் படுக்கையை மடித்துவிட்டு கிளம்பி இரவு சமைத்த உணவை சாப்பிட்டு விட்டு கிளம்பினர். பள்ளி மதிய உணவு சாப்பிட்டு விளையாடிய மணியை உடன் படிக்கும் கொம்பையா வம்பிழுத்துக் கொண்டிருந்தான் சக மாணவர்கள் சிரித்து உற்சாகப் படுத்தி மணியை கோபமூட்டினர் பொறுமையிழந்த மணி கொம்பையாவை தாக்க தான் டீவியில் பாத்த குத்துச்சண்டை வீரன்போல் தயாரானான் சண்டைக்கு தயாரான கொம்பையாவை வீழ்த்தும் அளவுக்கு மனதில் இருந்த பலம் உடம்பில் இல்லை சட்டை லேசா கிழிந்தது சக மாணவர்கள் சண்டையை தடுத்தனர். யாரு யார அடிக்கப் பாக்குறனு சொல்லிவிட்டு கொம்பையா போயிட்டான். எழுந்து வகுப்பறை நோக்கிச் சென்றான் மணி. டீச்சரிடம் சொன்னான் டீச்சர் இருவரையும் சமாதானம் செய்து மணியை அனுப்பிட்டார் வகுப்பறைக்கு. பள்ளி முடிந்ததும் வீடுக்கு போனதும் உலை வச்சிட்டு கிழிஞ்ச சட்டையை தச்சிக்கிட்டு வழக்கம் போல் தம்பியிடம் சண்டை போட்டு டீவி பாத்தான். இரவு அப்பா வந்தார் கொஞ்சம் சாப்பிட்டு போதையில் தூங்கிட்டார்.இதுதான் தினசரி வாழ்கை. ஒரு நாள் மதியம் வகுப்பறைக்கு பியூன் வந்து மணியை உன் தம்பியை கூட்டிட்டு வீட்டுக்கு போகச் சொல்லுங்க மேடம் அவங்க அப்பாக்கு ஏதோ பிரச்சனையாம் தலைமையாசிரியர் சொன்னார்னு டீச்சர்ட்ட சொல்லிட்டுப் போனார். டீச்சர் மணிய போகச் சொன்னாங்க தம்பியை கூட்டிட்டு வீட்டை நெறுங்கினான். வீட்டு முன் நின்ற மாசானத்தின் சக பணியாளர்கள் மணியை பாத்ததும் கதறி அழ ஆரம்பித்தனர்.அப்பா இறந்துவிட்டார்னு தெரிஞ்சதும் இருவரும் கதறி அப்பாவை காண வீட்டுக்குள் நுழைந்ததும் கிடத்தி போடப்பட்ட மாசானத்தின் முன் அப்பாவன அலறினர். இறுதி சடங்குகள் பத்கத்து வீட்டார்களின் உதவியுடன் முடிந்தது. நாலைந்து நாள் உதவியும் செய்தார்கள். மணி வேலைக்கு செல்வதென முடிவெடுத்தான். அப்பா வேலையை தொடர விரும்பாமல் வேறு வேலை தேடினான். யாரும் சேக்க மூனு நாள் பட்டினி. இரவு பாய் விரித்து தம்பியுடன் படுத்துகிட்டு பேசுனான். ராஜா நீ நல்லா படிக்கனும்டா நாளை நீ பள்ளிக்கூடம் போ அண்ணன் அப்பா வேலைக்கு போறேன். வேற எந்த வேலையும் தர மாட்டானுங்க. நீ ஒழுங்கா படிச்சா தான் வேற வேலைக்கு போக முடியும்.சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருவரும் உறங்கிட்டாங்க.

நிலவு மறையும் முன் எழுந்து வாய் கொப்பளித்து விட்டு குடிசையின் பின்புறம் சென்று அப்பா மீதம் வைத்த மது பாட்டிலை திறந்து குடித்து விட்டு வீட்டினுள் நுழைந்து காக்கி சட்டையை மாட்டிக்கிட்டு விஷ வாயு தாக்கி இறந்து போன தாய் தந்தையின் போட்டோவை பாத்து விட்டு வந்த கண்ணீரை தொடச்சிட்டு கிழிந்த பாயில் படுத்திருந்த தம்பியை உத்து பாத்து பெருமூச்சு விட்டு வெளியே வந்து வாளியும் துடைப்பத்தையும் எடுத்துகிட்டு வெளியே கிளம்பினான் மணி. விடியும் முன் கக்கூஸ் சுத்தம் செய்யனும். வேலை முடிந்து வீட்டுக்காரர் கொடுத்த 300 ரூபாயில் 200க்கு மது வாங்கி பாதியை குடிச்சு மீதிய காலைக்கு வைத்துக் கொண்டு சால்னா சாப்பிட வாங்கிட்டு வீட்டுக்கு வந்த மணியை பாத்ததும் கதறி அழுதான் இந்தச் சமூகம்

நம்மள வேற வேலை பாக்க அனுமதிக்காதா???????

நான் செய்ய மாட்டேனு சொல்லடா தம்பி தரலையே டா.. பசிக்குதுடா ஆனா இந்த நாத்தத்துல சாப்பிட முடியல டா தம்பி…….

சுத்தம் சோறு போட்டுச்சு ஆனா சாப்பிடவிடலையேடா

குத்துச்சண்டை வீரனுக்கு கக்கூஸ் வாளியை கையில் கொடுத்த சமூகம்.

எழுதியவர் : அதிவீரதமிழன் (13-Jul-17, 2:02 pm)
சேர்த்தது : அதிவீரதமிழன்
பார்வை : 418

மேலே