புதுக் கவிதை

தென்றல் வந்து தீண்டும் போது ... !!! - புதுக்கவிதை


தென்றல் வந்து தீண்டும் போது
தேகம் தீண்டும் ஞாபகம் மனசிலே !!
தீயும் வந்து சுடும் போது
தீபம் தீண்டும் நினைவுகள் நெஞ்சிலே !!


தந்து தந்து போகிறதே !
தாவி என்னை அணைக்கிறதே !
எண்ணமெல்லாம் உன்னிடமே
எம்மருங்கும் பாய்கிறதே !
சின்னவளே நெருங்கிட வா !
சித்தெறும்பும் கடிக்கிறதே ! மன்னவனும் நானடியோ !
மங்கை நீ பற்றிடவே !


உண்மையினைச் சொல்லிடுவேன் !
உயிரையுமே தந்திடுவேன் !
விண்ணுலக தேவைதையோ ! விடிவெள்ளி ஒளி அழகோ !
பண்ணெடுத்து பாடிடுவேன் ! பாவி உனைத் தீண்டியதால் !
வண்ணமகள் வாய்திறந்து வாட்டமதைப் போக்கிடுவாய் !


யாரும் அறியாமலே யானும் சொல்லிடவும்
பதங்களும் இல்லையடி ! பாசமே நீ சொல்லடி !
நிலைக்குமா காதலுமே ! நின்று சொல்லடி ஞானப்பெண்ணே !
வானவில்லும் பொறாமை கொள்ளும்
வனப்புடன் இருப்பவளே ! ஏழு நிறமும் நீதானடி !
என் நினைவும் நீதானடி !!!


மொத்த சொற்கள் :- 76
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jul-17, 5:02 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : puthuk kavithai
பார்வை : 110

மேலே