என்றேனும் நீ வரக்கூடும்

மனதில் தேங்கிய உன் நினைவுகள்
என்னை விடாமல் துரத்துகின்றன
மழை போல பொழிந்து ஒரேடியாக
அவற்றை அழித்துவிட முயன்று தோற்கிறேன்

சாய்ந்த என் மனதை சாந்தப்படுத்திகிறேன் நானே
தேய்ந்த நிலவாய் அறியாத பேதை இங்கே நானும் தானே

அழிக்க முடியாத ஓவியம் இந்த காதல் தானோ
அன்பே உன்னை என் கண்கள் சந்தித்தது ஏனோ

அடங்காத காளை இங்கு ஆட்டுக்குட்டி ஆனதடி உன் பின்னால்
தொடங்காத கோலமாய் ஏனோ உனக்குள் மட்டும் என் காதல்

நீ வருவாயா என காத்திருக்கின்றன என் பாதைகள்
நீ தருவாயா பதில் என காத்திருக்கின்றன என் வாதைகள்

உனக்கு குடையாகி வெயில் மறைக்கும் பாதுகாப்புகவசமாய் என கோடைகாலங்கள்
உன்னோட நனைந்து மீண்டும் உன்னை பூப்படையச்செய்யும் என் மழை காலங்கள்

கண்டதும் காதல் கனிந்தது அந்த ஆதாம் ஏவாள் காலம்
கேட்டும் நீ கனியாதது என் போதாத காலம்

உன்னை தரிசிக்க மட்டுமே என் பார்வைக்காலங்கள்
உன்னோடு வாழ மட்டுமே என் ஆயுள்காலங்கள்

உன்னை கண்டதும் உள் கொண்டதே என் உயிரின் சாதனை
அதுவே என்னை கொல்வதே என் வாழ்வின் உச்ச சோதனை

உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால்
நான் சந்தோசமாய் இருந்திருப்பேன் ஒருவேளை
இந்த மரண வலியில் இருந்து இனி விடுதலை
இனியவளே நீ என் கை சேரும் வேளை

என்றேனும் நீ வரக்கூடும்
என்றெண்ணி நான் காத்திடும்
ஆசைகள் அதிகம் அதை நிறைவேற்று

என்றேனும் நீ வரக்கூடும்
என்றெண்ணி நான் காத்திடும்
நம்பிக்கை நிதர்சனம் அதை நிஜமாக்கு

என்றேனும் நீ வரக்கூடும்
என்றெண்ணி நான் காத்திடும்
நிகழ்காலம் கனவுகள் அதை என் எதிர்காலமாக்கிடு !!!

எழுதியவர் : யாழினி valan (15-Jul-17, 1:33 am)
பார்வை : 140

மேலே