கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-02

......கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்.....

காதல் துளிகள் : 02

06.அவன் உள்ளம் என்னோடு
மோதிச் சென்றதில்
தினக்குறிப்பின் பக்கங்களில்
ஒளித்து வைத்தேன் காதலை
கவிதைகளாக...

07.அவன் இதயத்தூரிகை என்னை
ஓவியமாக வரைந்ததில்
என் காதலறை பிரசவித்தது முதல்
கவிதையாக அவனை...

08.அவனின் மௌனக் கூட்டுக்குள்
ஒளிந்து கிடக்கும் இரகசியங்களை
நானும் தேடிப் பார்க்கிறேன்
என் வார்த்தைகளின் அர்த்தங்களை
அதனுடன் கோர்த்திடவே...

09.ஆயிரம் கவிகள் எழுதியும்
அவனைக் கவிதையாக எழுதிட
மறந்துவிட்டேன்..
அவன் எழுதிச் சென்ற ஒருவரிக்
கவிதையிலோ இவ் அகிலத்தை
நானும் மறந்துவிட்டேன்...

10.பார்வைகள் பேசிக் கொண்ட
போது மொழிகள் மௌனமாகின
பேசாத வார்த்தைகள் அனைத்தும்
பேசிடும் கவிதைகளாகின...

எழுதியவர் : அன்புடன் சகி (15-Jul-17, 4:59 am)
பார்வை : 353

மேலே