நீர்க்குமிழி
காற்றைக் கிழித்துக் கொண்டு
கால்கள் தான் ஓட
பாதணி பட்டு பரவசமாய்
பூமியும் தாளம் போட
தாளத்திற்கு ஏற்றவாறு
இதயமும் மூச்சு வாங்க
எங்கோ தூரத்தில் தெரியும்
விண்மீனுக்காய் இன்னும் ஓடி
இளைக்கும் போது சிறிது வியர்வை
நிலத்தில் சொட்டிச் சிந்த
இனியும் ஓட முடியாத நிலையில்
நின்று நிதானித்து நடக்க
நடக்கவும் முனைந்தாலும்
நரம்பெல்லாம் இழுக்க
தரையோடு தரையாய்
இழுத்துப் போகும் உடம்பிலும்
உயிரின் ஆசை ஒட்டி இருக்க
இந்தப் பிறவியும் எதற்கோ என்று
எண்ண வைக்கும் எதிர்க் காற்றுக்கு
எதிராக இனி ஒன்றில்லை...
உயிரும் காற்றாகிப் போனதனால்...
நீர்க்குமிழி நீரில் மறைந்ததனால்...
ஓடுவது நிற்பது எக்காலம்?
நிற்பதும் அமர்வது எக்காலம்?