அனுபவி

நாம் பருகும் ஒரு துளி தேனும்
பத்தாயிரம் கதைகள் சொல்வதென்ன?
ஒவ்வொரு மலராய்த் தேடிப் பிடித்து
ஒவ்வொன்றிலும் ஒரு துளி எடுத்து

கூடித் தின்று கொட்டம் அடிக்காமல்
நாளைக்கென்று சேர்த்து வைத்ததை
மேனி நோக பறந்து திரிந்து
பக்குவமாய் சேமித்ததை எல்லாம்

ஒரு நொடியில் இழந்து விட்டு
உயிரும் போகும் பிறவியிலே
என்று ஒவ்வொரு துளி தேனும்
இனித்தாலும் ஓலமிடுவதென்ன?

எத்தனை பூக்களின் தேன்
எத்தனை தேனீக்களின் உழைப்பு
இன்று ஒவ்வொரு துளியாய்
ருசித்து ரசிக்க நம் கையில்...

எழுதியவர் : shruthi (20-Jul-11, 12:18 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 382

மேலே