ஏமாற்றம்

ஏமாற்றம்
வானம் பூத்த பூமி தன்னில்
பசியின் வித்ததனை
வியர்வை சிந்த
விதைத்து வைத்து
நம்பிக்கை பயிர்
வளர்த்தேன் இதயத்தில்
பொய்க்காது வானமென்று . . .
ஆம் . . .
பொய்க்கவில்லை வானம்
பொய்த்ததென்னவோ
பொக்காய்ப்போன
வித்துகள்தான்
எம்பிள்ளைகள் போல் . . . . .