அலாரம்

அலாரம்

அதிகாலைப்பொழுது
வழக்கமாய்
இடைவெளிவிட்டு
அலறியது அலாரம் . . . .
தூக்கத்தின்
மடிகிடந்தவனுக்கு
அது இடைவிடாத
இம்சையாய் . . . . .
எப்படியும்
எனை எழுப்பிவிட
அது தொடுக்கும்
பனிப்போராய் . . . . .
போர்வையில்
தூக்கத்தை
மடித்துவைத்து
பார்க்கின்றேன்
பாவமாய் கடிகாரம்
ஏமாற்றத்தில்
ஆம் . . . .
விடுமுறை நாட்களில்
நம் சோம்பலை
மட்டுமே எழுப்ப முடிகிறதென்று . . . .

எழுதியவர் : சு.உமாதேவி (16-Jul-17, 2:44 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : alaaram
பார்வை : 119

மேலே