சொல்லிடத்தான் நினைக்கிறேன்
சொல்லிடத்தான் நினைக்கிறேன் . . . .
சொல்லிடத்தான் நினைக்கிறேன்
ஆயினும்
உன் இதழால்
என் உயிர் உறிஞ்சி
எனை இழக்கும் தருணத்தில்
உன் மூச்சுக் காற்றில்
புதைத்து விடுகிறேன்
மொத்தமாய் என்னை . . . .
சொல்லிடத்தான் நினைக்கிறேன்
ஆயினும்
நான் வந்து போன
சுவடுகளை
உன்
ஒவ்வொரு அணுவிலும்
நீ பதித்து மூடும்போது
வார்த்தையை விழுங்கி
மூர்ச்சையாகிப் போகின்றேன் . . . .
சொல்லிடத்தான் நினைக்கிறேன்
ஆயினும்
உன் இருவிரல்
ஸ்பரிசத்தில்
உன் ஒருமைத்தனத்தை
பன்மையாக்கி
என் உடல் சூட்டால்
உன் சோகங்கள்
சுகமாகின்றதோ
என மறுதலிக்கின்றேன் . . .
சொல்லிடத்தான் நினைக்கிறேன்
என் வாய் கூட்டி எனை
தீண்டிடத்தான் வேண்டாமென
தொட்டிடவும் . . .
விட்டிடவும் . . .
முடியாத உன்
திணறிலில் நான்
சொல்லாது
எழுதிவிட்டேன் என்
பேழைமீது
புகை உனக்கு பகை என்று . . . .
இனி ஒரு பிறவியில்
இருவரும் பரீட்சயித்தால்
உன் ஆயுளைக்கூட்டிடும்
அருமருந்தாய் நானிருக்க
வேண்டிக்கொண்டவளாய்
அன்புடன்
சிகரெட் . . .