பாதை பயணம்

பாதை பயணம்

சில நேரம் நீ கடந்து செல்லும் பாதை
யாரோ சிந்திய வியர்வையில்
பூத்த ரோஜாக்களின்
மலர் வனத்தின் ஊடே
சொகுசுப் பயணமாய்!
சில நேரம் நீ கடந்து செல்லும் பாதை
பாராங்கற்களால் நிரம்பி
மாறலாம் உன்னால்
கூழாங்கற்களாய்
தொடர்வோனின் வழித் தடமாய் நீ!

சில நேரம் நீ கடந்து செல்லும் பாதை
படு குழியாய் உனை தன்னுள்
புதைத்து கொள்வதாய்
ஆங்கோர் எச்சரிக்கை பலகையாய் நீ!

பாதைகள் பல விதமாய்!
பிரயாண தூரம் தெரியாது
பிரயாணப்பட்டாலும்
இறங்குமிடத்தில் சரியாக
இறக்கி விடப்படுவாய்!

எழுதியவர் : சு.உமாதேவி (16-Jul-17, 2:56 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : paathai payanam
பார்வை : 110

மேலே