என் காதல் தேவதை

(மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு)

குருவிகளின் கொஞ்சல்களில்
கொஞ்சமாய் கண்விழித்து
ஜன்னலோரம் பார்க்கிறேன்.
பூ மரங்கள் மேல் பனித்துளியில்
தங்க நிற வளையங்களாய்
மினுங்கிடும் நீர்துளிகள்.

அரைத்தூக்கம் கண்களிலே
ஆசையாய் இருந்துவிட
அவசரமாய் ஜன்னல்
கதவுகளை திறக்கின்றேன்
பளீரென்று ஓர் வெளிச்சம்
என் பார்வையதை பறித்துவிட்டு
சில வினாடிகளில் மறைகிறது
மறுபடியும் பார்த்தால்
புரிந்தது என் புத்திக்கு
ஆம்! சூரியனின் விம்பம்
சோடி வளையல்களில் எதிரொலித்து
ஜன்னல்களின் இடைவெளியால்
என் கண்களை தாக்கியது
முகம் பார்ப்போம் என்றால்
முடியவில்லை பூமரத்தால்
அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை
மரம் வளக்கும் கொள்கைவிட்டு
மரம் தறிக்கும் கொள்கையது
அதன் பின்னர் நான்
கதவோரம் நான் ஓடிவர
அழைக்கிறது ஓர் குரல்
என்னையல்ல முன் சென்றவளை !
தனியார் கல்வி நிறுவனத்தில்
கல்விகற்கும் தோழிமார் இருவருமே !
அவளின் முகத்தையும் பார்த்துவிட்டேன்
பெயரையும் தெரிந்துகொண்டேன்
இதைத்தான் கண்டதும் காதலென்று
பெரியோர்கள் சொன்னார்களோ ?

இருவரும் தனியார் கல்வி நிறுவனத்தில்
அனால் வேறு வகுப்புகளில்
இன்று முதல் படிப்பதுடன் சேர்த்து
அவளின் பாதுகாவலன் வேலையையும்
நானாக எடுத்துக்கொண்டேன்.

அவளும் தெரிந்துகொண்டாள்
எனை ஆசையாய் பார்பதற்கு
சிரிக்கவும் பழகிக்கொண்டாள்
சில நாள் அலைச்சலின் பின்
பழகுவதி அவள் குழந்தை
பார்ப்பதிலே அவள் செம்பருத்தி
கோபத்தில் சிவந்துவிட்டால்
அவள் நிறமோ செவ்வாழை !
சும்மாவே சீண்டிவிட்டால்
அவள் குணமோ தீக்கோழி!

வீட்டில் மொக்கு பிள்ளையெனும்
பெயரெடுத்த எனைக்கூட
முதல் தரமாய் பரீட்சையிலே
தேற வைத்த தேவதைதான்.

காதலிலே வென்றோருமும் உண்டு
தோற்றோரும் உண்டு
வாழ்ந்தோரும் உண்டு
அழிந்தோரும் உண்டு
காதலித்துப் பாருங்கள்
கனவு உலகம் நம் கண்ணில் படும்
பட்டாம் பூச்சிகள்
நம் கண்களிலே பறந்தோடும்
பால் நிலவும் உன் கைகளிலே
பவளமாய் தவழ்ந்து வரும் !
சூரியனும் சமயத்தில் - உன்
குளிர் நிலவாய் மாறிவிடும்.

பனிக்காற்று வேளையிலும்
போர்வையின்றி படுப்பீர்கள்
பசியொன்றும் தெரியாது
உடலோ உறக்கமென்றும் உணராது
உடலெல்லாம் பூரிப்பு
உணர்வெல்லாம் பெரு மகிழ்ச்சி
காதலை நேசித்தால்
உன் பலத்தை நீ அறிவாய்
அறிந்ததுமே நீ உணர்வாய்
காதலின் பலம் அதனை.

எழுதியவர் : தோழி (19-Jul-10, 6:32 pm)
பார்வை : 559

மேலே