போலிகள் நட்பில் வேண்டாம்
போலிகள் நட்பில் வேண்டாம்...!
பொய்களை பொதியாய் சுமந்தால்
மெய்முதுகுகள் கூனாய் போகும்
வேடமிட்ட நீலநரிகளின் சாயம்
சிறு தூரலில் வெளிரிப் போகும்
மிச்சமீதியின்றி எச்சில்களையும் சுரண்டல் செய்யும்
கொச்சையான வாழ்க்கை பூமிக்கு களங்கம்
பச்சை நோட்டுகளால் பாசவலை பின்ன முடியாது
பச்சோந்திகளுக்கு என்றும் பாவமன்னிப்பு கிடையாது
உண்மைகள் தேடி அலைகின்றேன்
நல் உணர்வுகள் கூடி விழைகின்றேன்
பனிவெண்மை தூய்மையில் நனைகின்றேன்
நாளும் நல்லதே நடந்திட முனைகின்றேன்
விற்பனைக்குப் போகா வீரியமில்லா போலிகள்
கற்பனைப் பொய்கள் கூட்டும் களவாணிப் பூனைகள்
சொற்பதங்கள் தேடி மனம்சொக்கப் பேசும் சாத்தான்கள்
கற்புடை நட்பில் வேண்டாம் களைந்து விலகிப் போகட்டும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி