கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-03

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-03

......கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்......

காதல் துளிகள் : 03

11.அவனுடனான என் மோதல்கள்
அனைத்திற்கும் முற்றுப்புள்ளி
வைத்துச் செல்கிறது
உதடுகள் வரையும் கவிதைகள்..

12.காதல் வானில் அவன்
வானவில்லாக தோன்றும்
வேளைகளில்..
உள்ளம் என்னை அறியாமலேயே
வரைந்து கொள்கிறது
எட்டாம் வானவில்லை..

13.புன்னகை தேசத்தில் அவன்
பூக்களாக மலர்ந்து சிரிக்கையில்
என் மனம் அங்கே
புகைப்படக்கருவியாக பறந்து
செல்கிறது...

14.நட்சத்திரக் கூட்டத்தில் நான்
மட்டும் அங்கே தனித்திருக்க
மேகமாய் அவன் வந்து அணைக்கும்
நேரங்களில் என் மனவானில்
பட்டாம் பூச்சிகள் பட படத்துச்
செல்கின்றன...

15.மழையாய் அவன் மண்ணை
அணைக்கும் வேளைகளில்
வானும் மண்ணும் மட்டுமல்ல
நானும் அவனும் கூட காதல்
கொள்கிறோம்...


Close (X)

14 (4.7)
  

மேலே