கஜல்

==============
மதில்மேல் ஒரு பூனையாய் நகர்கிறது உன் புலம்
பாயும் திசை எதுவாயினும் விழவேண்டும் என் நிலம்
=========================================
விரித்த வலையில் மான் விழக்கூடும் அந்த வனத்திலே
மான்போலவே நானும் விழவோ உந்தன் விழியிலே
============================
முந்தானையால் மனதை மூடி
முறுவலித்து போலியாக போவாயே!
தழுவுகின்ற காற்றைத் தடுப்பதற்கு
சல்லடை வேலியாக ஆவாயே!
==================================
கடவுள் செய்த கண்ணீர் மெழுகுவர்த்தி நானல்லவா
கண்ணீரை எரியவைத்த ஊதுவத்தி நீயல்லவா
===========================================

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jul-17, 2:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kajal
பார்வை : 91

மேலே