உனக்காக
தினந்தினம் உன்னை நினைக்கிறேன்
ஏனென்று தெரியவில்லை
எப்பொழுதும் உன்னை புதிராக பார்க்கிறேன்
எதனால் என்று அறியவில்லை
ஒவ்வொறு நிமிடமும் மாயமாய் மறைகிறதே
உனக்காக காத்திருந்து
எத்தனை ஆவல் உன்னைக் காண
மலர்கள் மலர்ந்து வாடுவதை போல் வாடுகிறேன்
நிமிடங்கள் யுகமாய் மாற
நான் கறைகின்றேன்
யுகங்கள் கறைந்து போனாலும்
காத்திருப்பேன் உனக்காக
நம்பிக்கையுடன்...

