இன்றைய தாலாட்டு

இன்றைய தாலாட்டு

மண்ணுறங்கும் போதினிலே
விண்ணதிரும் போல் நீயும்
அழச்சொல்லி யாரடித்தார்

தங்கத் தொட்டில் உனக்கு
தாயானத்தாயெனக்கு நீயும்
கிடைத்திட்ட பொக்கிஷமே

தாலாட்டுப் பாடுகிறேன் நீ
கண்ணுறங்கு கண்மணியே
ஆராரோ ஆரிராரோ

உன்போன்ற மழலைகள்
உனை ப்போன் றில்லையே
அரைகுறை ஊட்டத்தாலே
கண்ணுறங்க வில்லையடா

கதறும் கதறலென் காதில்
சில்லிவண்டு சப்தம் போல்
காதைத் துளைக்குதிங்கே

இத்தாயென்றன் தாலாட்டு
அம்மழலை காதோலிக்க
கண்ணுறங்கச் செய்திடில்

காற்றலைக்கு நன்றிகூறி
இன்றைய தாலாட்டு சமன்
செய்த பெருமை எனதாகும்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

((நன்றி: 17.07.17 அன்று தினமணி கவிதைமணியில் பிரசுரமான எமது கவிதை))


Close (X)

0 (0)
  

மேலே