சாலைகள்
சில சாலைகள், நம் குழந்தைப் பருவத்திலிருந்து
நம்மோடு பழகும் ஓர் நபராகவே உரு மாற்றம் அடைகின்றன...
அதில் நடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், என்றாவது கடந்து செல்லும் மின்னல் நொடிகளிலும், எத்தனை எத்தனை நினைவுகள், நம் கைகோர்க்கின்றன!
பிள்ளைகளாய், சிரித்து விளையாடிய சுமைதீண்டாத் தெருவினில், மிதிவண்டி பயின்ற முன்னோட்ட சந்துகளில், பள்ளிக்கு தினம் செல்லும் நிழல் தரித்த மேடுபள்ளங்களில், பறவைகளாய், நண்பர்கள் கூடும் புதுப் புது புவியியல்களில், துளிர்பருவக் காலங்களில் காதல் கண்டெடுக்கும் மலர் விதான சாலைகளில், துடித்துத் தவிக்கும் இன்னலாய் செய்தி வருமின், பாய்ச்சலாய் பயணிக்க நம்மைக் கடத்தும் சாலைகளில்...
இன்னும் இன்னும் எண்ணற்ற சாலைகளை, நம் நினைவுகளில் சாவிகளைப் போல் மாட்டியுள்ளோம்; முடிவிலாப் பயணங்களுக்கு பூட்டுகளே இல்லை, சில முட்டுச் சந்துகளுக்கு மட்டும், நூறு சாவிகள்.