வளையற் சிந்து
உள்ளத்திலே வருத்தமென்றால்
உடைந்துவிடு வாயா - மது
ஊற்றிக்குடிப் பாயா - உன்
உயிரைவிடு வாயா - தடை
உடைத்தெறிந்து முன்னேறிட
உழைத்துப்பிழைப் பாயா ?
கள்ளையுண்டால் போய்விடுமோ
கவலையெல்லாம் ஓடி - தாலி
கட்டியவள் வாடிக் - கண்
கலங்கிடுவாள் கூடிப் - பின்னும்
கட்டுப்பாடு இல்லையென்றால்
காலன்வரும் தேடி ...!!!
சியாமளா ராஜசேகர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
