மலர் ரோஜாவே மௌனம் ஏனோ
மலர் ரோஜாவே
மௌனம் ஏனோ ?
முள்ளால் சூழ்ந்து நிற்கிறோமே
என்ற வருத்தமோ ?
மங்கை ஒருத்தி பறித்து
சூடவில்லையே என்ற ஏக்கமோ ?
கவிஞன் ஒருவன் போற்றிப்
பாடவில்லையே என்ற ஏமாற்றமோ ?
இதழ்களில் வண்ணங்கள் ஏந்தி
இதயத்தில் தேன் ஏந்தி
மெல்ல மலரும் ரோஜாவே
எனக்காக நீ உனக்காக நான்
என்றேன் !
சிரித்தது ரோஜா !
-----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
