காற்று கவிஞர் இரா இரவி

காற்று ! கவிஞர் இரா .இரவி !


உணர்த்தியது
ஆடி பிறந்ததை
காற்று !

தென்றல் மெல்லினம்
புயல் வல்லினம்
காற்று !

பின்னிருந்து முன்னேற்றியது
முன்னிருந்து தடுத்தது
காற்று !

கிளைகளை மட்டுமல்ல
மரங்களையும் முறிக்கும்
காற்று !

குப்பையும்
கோபுரத்தில்
காற்று !

கோபுரக் கலசமும்
மண்ணில்
காற்று !

உயிரினங்கள்
உயிர் வாழ
காற்று !

பஞ்ச பூதங்களில்
பெரிய பூதம்
காற்று !

புல்லாங்குழல்
இனிய இசை
காற்று !

சிறு தீ
பெருந் தீ யானது
காற்று !

இல்லை உருவம்
உண்டு ஆற்றல்
காற்று !


நின்றது சுவாசம்
வந்தது மரணம்
காற்று !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-Jul-17, 7:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 261

மேலே