இதுதான் காதலா
நீ ஒன்றும்
அவ்வளவு அழகில்லை...
ஆனால் ...
உன்னை நேசிக்க
தொடங்கிய முதல்
உன்னை தவிர
எதுவும் அழகில்லை..
என் பார்வையில் ....
என் கண்கள் காணும்
அத்தனையையும்...
என் நினைவுகள் சுவாசிக்கும்
அத்தனையையும்...
உன் பிம்பமாய் மட்டுமே
என்னுள் அழகாய்
உயிர் கொள்கிறது...
இதுதான் காதலா....