தாய்ப்பாலும் வறண்டுவிட்டதே

தாய்ப்பாலாய் நாம் அருந்திய அன்புத்தாயின் இரத்தமும் ஞானம் தரும் பாலென்று யாருமறியாது தன் பிள்ளை வளர்க்க தாய் கொடுக்கும் உணவென்று பேசி சித்தம் கலங்கிப் போனார்...

மூன்று வயது வரை தாய்ப்பால் அருந்திய காலம் போய் பிறந்த ஆறு மாதத்திலே பிள்ளைக்கு பால் தர இயலாத தாயாக வறண்டுவிட பசுவும் தன் பாலை வாரி வழங்குகிறது எண்ணற்ற கைக்குழந்தைகளோடு சேர்த்து இந்த அறிவார்ந்த மனிதர்களுக்கும்...

ஈன்ற கன்றை அவிழ்த்துவிட, கன்று தாயின் மடுவில் வாய் வைக்க பால் சுரந்து கன்றின் தொண்டையை நனைக்கும் முன்னே இழுத்தே கட்டிவிடுவார் கன்றினை...

தாய்ப்பாசத்தால் சுரந்த பாலையெல்லாம் கறந்து கொண்டு வெற்று மடுவைச் சுவைக்கக் கன்றினை அவிழ்த்து விடுவார் சுயநல மாந்தர்...

வெற்று மடுவைச் சுவைத்த கன்றும் நிறையாத வயிறுடன், " அம்மா ", என்று கத்திட,
தன் கன்றை வெறித்து பார்த்த தாய்ப்பசுவும், " அம்மா ", என்றே கதறிட, பசு இட்ட சாபத்தால் மனித மங்கையரும் தாய்மை அடைந்த சிறிது நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பதையும் இழக்கின்றனரே தன் பிள்ளைக்குப் பசியாற்ற உணவோடு ஞானம் தர இயலாமலே...

இயற்கையாய் கிடைக்கும் தாய்ப்பாலின் ஞானம்,
பால் பொடியைக் கலக்கி அருந்தினால் கிடைக்குமோ???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jul-17, 12:31 pm)
பார்வை : 589

மேலே