நாளும் பொழுதும் நமது சொந்தம்

உன் விழிகள் இடை விடாது கணை தொடுத்து
என்னில் முறை கேடாக நடந்து கொண்டன
புன்சிரிப்புப் பாணம் எய்து என் இதயத்தைத் துளைத்தவள் நீ
எனது கண்ணயர்வு மண்டலத்தை உன் எண்ண விற்களால்
உடைத்து உள்நுழைந்து என் இரவுக் கோட்டையை
நீ வசப்படுத்திச் சென்றாய்
காற்றோடு தோழமை பூண்டு உன் மல்லிகை வாசத்தை
என்னில் கலப்பதற்குச் சதி செய்தாய் இவ்வாறு
என் விழிகளில் நிறைந்தவள் நீ என்னிலே உறைந்தவள் நீ
என்னைத் தன்னோடு கொண்டு போனவளே
மையல் விழியாலே மயக்கும் சிரிப்பாலே
சொக்கும் நினைவாலே சொற்கக் கனவாலே
என்னுள் நுழைந்தவளே என்னிதயம் கவர்ந்தவளே
நீயாக வந்துவிடு என்னில் நானாகக் கலந்து விடு
நாளும் பொழுதும் நாமாக வாழ்ந்திடலாம்
காலம் முழுதும் கற்கண்டைச் சுவைத்திடலாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (22-Jul-17, 5:21 pm)
பார்வை : 117

மேலே