சரிபாதி தந்தானோ

மூத்தவன் ஆதவன்
உறக்கம் கலைந்து
முகம் காட்டும் முன்
விடிகாலைப் பொழுதில்
வழிபடும் மக்களுக்கு
தரிசனம் தர
துயில் கலையும்
தெய்வங்களை

தொழுது வழிபடுவதுபோல்
தென்றல் காற்று
மெல்ல அசைந்து வரும்,
மொட்டுக்கள் மலர்ந்து
மனம் வீசும்,
கூக்கூவென குயில்கள்
குரலெழுப்பி மந்திரம்
சொல்லும் நேரமது

குழந்தை தெய்வங்களின்
துயில் கலைந்து
உணவு தந்து—பள்ளிக்கு
வழியனுப்பி வைக்கும்
பெற்றவளின் பணிவிடை
பரமனுக்கு ஆராதனையோ!
அதனால் தானோ—இறைவன்
சரிபாதி தந்தானோ!

எழுதியவர் : கோ. கணபதி. (23-Jul-17, 12:34 pm)
பார்வை : 55

மேலே