தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளுங்கள்
தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளுங்கள்
வாழும் வரையில்
வீழும் வரையில்
மண்ணோடு மல்லுகட்டி
மனுச சாதிக்கு
படியளக்கும் கடவுள்கள்
பசியோடும் பஞ்சத்தோடும்
வானம் கைவிட்டு
கடவுள் கைவிட்டு
அரசும் கைவிட்டு
அணைகளும் அடைபட்டு
வயலோடு சேர்ந்து
வாழ்க்கையும் வரண்ட பின்
திக்கு தெரியாது
வாழவும் முடியாது
என மாண்டுபோனவர்களை தவிர
இன்னும் எஞ்சியிருக்கும்
நாளைய பிணங்களாய்
உண்ட கடன்
நெஞ்சில் இருக்கும்
அந்த கடன் நம்மை காப்பாற்றும்
என நம்மை நம்பி
நாசமானவர்களே
இங்கே அதிகம்
இவற்றை பற்றி நமக்கென்ன கவலை
ரஜினி அரசியலுக்கு வருவாரா
கமல் அரசியலுக்கு வருவாரா
அவர் வருவாரா இவர் வருவாரா
தலைமை ஏற்க என்று
குணிந்து குணிந்து
உங்கள் வாரிசுகளையும்
முதுகெலும்பற்ற அடிமைகளாய்
மாற்றும் பெருமை நம்மையே
சேரும்
இதை விடவும் கேவலமாக
ஜீலீ கட்டியணைப்பது யாரை
ஓவியா சொல்வது என்ன
நமிதாவின் ஆடைஎப்படி
என சிறிதும் வெட்கமின்றி
வேடிக்கை பார்க்கும்
உங்களை கண்டால்
பிறன்மனை நோக்கா என்ற
வள்ளுவன் கூட
காரி உமிழ்ந்திருப்பான்
முடிந்தால் இனியாவது திருந்துங்கள்
இல்லையேல்
தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளுங்கள்
சொரணையற்ற நடைபிணமாய் வாழ்வதற்கு
நிஜ பிணங்களாய் மாறுவதே
சால சிறந்தது
ஆதங்கத்துடன்
ந.சத்யா