உழவரும் முதியோர் இல்லமும்
நெடுவயலில் சிறுவிதையாய்
உனைநட்டு கண்துயிலா
வண்ணமுனை காத்துநின்று
வியர்வை எனும் தாய்பாலை
உணவாய் ஊட்டி சிறுபயிராய் வரும் போது
புன்முறுவல் பூத்து
சமைகின்ற பொழுதுனக்கு வேலியமைத்து
கனிவான பிள்ளை முகம் கண்டு
பசியாறும் தாய் போல உனைகானும்
உழவன் நான் !
வளர்ந்த பின் திசை மாறும்
பிள்ளைகளின் கீழ்செயலாம்
"பெற்றோரை முதியோரில்லத்து விடுதல் போல"
பயிரே உனைவளர்த்த உழவனெக்கோ
முதியோரில்லமும் இல்லை !
முதுமையும் வறுமையுமே மிச்சம் !