உன் வீட்டுக்காரன்

உன்னை நினைத்து தொடுகையில்
எழுதுகோல் சிலிர்த்து உதிர்த்த
வார்த்தை மலர்களை
என் நெஞ்சத்து வீட்டில் தோரணமாக்கி
அதன்வழியே நீ பிரவேசம் ஆகும் நாளை எண்ணி
காத்திருப்பது தன் மனதை
நீ வாழும் மனையாக்கிய வீட்டுக்காரன்.

எழுதியவர் : பாலா (27-Jul-17, 10:16 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 872

மேலே