மஞ்சப்பை
![](https://eluthu.com/images/loading.gif)
நண்பர்- 1 :- (ஆஸ்பத்திரியில்) என்ன நண்பா சுகரா•••?
நண்பர் : 2 :- ஆமாம் நண்பா
நண்பர் - 1 :- எவ்லோ இருக்கு
நண்பர் - 2:- ஒரு மாசத்துக்கு அஞ்சி கிலோ வாங்கறது வழக்கம் வாங்கி ஒரு வாரம் ஆவுது இப்போ என்ன நாலு கிலோ அளவுக்கு இருக்கும்
நண்பர்- 1:- உன் வீட்ல இருக்கிற சுகரை கேக்கல உன்னோட ஒடம்புல இருக்கான்னு கேட்டேன்
நண்பர் - 2:- நான் உடம்ப நக்கி பாக்கல நண்பா
நண்பர் - 1 :- ( மனசுக்குள்) சரியான மஞ்சப்பையா இருப்பான் போல இருக்கு எடக்கு முடக்காவே பதில் சொல்றான் இதுக்கு மேலே பேசினா சரிபட்டு வராது)•••!!