கீதையா குரானா
சொல்லின் மகத்துவம்
பொருளின் உன்னதம்
சேர்ந்ததொரு பாகவதம்
சொன்னதிங்கே எல்லாம் தான்
கீதை சொல்லாததை
குரான் பகராததை
பைபிள் பதியாததை
வாழ்ந்து காட்டிய
மனிதனுக்கு அடையாளமெது
மதச்சார்பல்ல மனிதன் வேண்டுவது
மகத்தானது மாண்பானது மற்றைஏது
உண்டென்றால் அதைச்சொல்
உனக்கதுவே தெரியாதே?