எங்கும் நிறைந்தவன்

பணமிருந்தால் அங்கு குணமில்லை குணமிருந்தால் அங்கு பணமில்லை
அழகிருக்கும் அங்கே அறிவு போகும் அறிவிருந்தால் அங்கே அழகு போகும்
பணமும் குணமும் சேர்ந்தால் அழகும் அறிவும் மறைந்து போகும்
அழகும் அறிவும் இணைந்தால் பணமும் குணமும் குறைந்து போகும்
எல்லாம் சேர்வது இன்பம் அவ்வாறு உள்ளது மிகமிக அபூர்வம்
குறைகள் உள்ளது துன்பம் அதிலும் கண்டான் அவன் சமத்துவம்
இழந்ததை இரப்போர்க்குத் தந்து தருவோர்க்கு வாழ்வினைத் தந்தானே
மனித வாழ்வில் சமச்சீர் தந்தானே சமத்துவம் கொண்டானே
அவன் தான் இறைவன் அவன் எல்லாம் அறிந்தவன் எங்கும் உள்ளவன்
எம்மைக் காப்பவன் எம் குறை தீர்ப்பவன்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (30-Jul-17, 12:39 pm)
பார்வை : 120

மேலே