எண் சீர் விருத்தம்
பெற்றேனே யான்பேறு சோலை தன்னில்
------ பேர்சொல்லும் வகைதனிலே பயிற்சிப் பெற்று
கற்றிட்ட யாப்பினையும் மனத்தில் கொண்டு
------ கவிதைகளை வனைந்திட்டேன் மரபில் யானும்
முற்றிலுமாய்க் கற்பித்த வரத ராசர்
------- முத்தான பைந்தமிழின் நிழலில் நின்று
பற்றுடனே பண்களையும் பாடு கின்றேன்
------- பல்வித்தை இலக்கணத்தில் உண்டாம் பண்டே !!!