பெண்ணியல்
![](https://eluthu.com/images/loading.gif)
!!!பெண்ணியல்!!!
சிரம் தாழ்த்தி என் கரம் பற்றி,
நீர்வழிய, வந்தாயடிப் பெண்ணே!!!
என் கரம் பற்ற,
பல கரம் துறந்தாயடிப் பெண்ணே!!!
முரண்பட்டு, அடம் கொண்டு,
ஆசையை புணர்ந்தாயடிப் பெண்ணே!!
ஏனோ, என் உணர்வோடு தோற்று,
புணர்க்கொண்ட ஆசையை,
புதையுரச் செய்தாயடிப் பெண்ணே!!!!
புதையுன்ற ஆசை, விதையாய் வீறுகொள்ள, என் விரல் நீக்கி வழிவிடுகின்றேனடிப்பெண்ணே!!!
ஏனோ, என் கரம் இறுக விரல் கோதி என்னுள்,
மீண்டும்,மீண்டும், புதைகின்றாயடிப்பெண்ணே!!!!
அடி என்னவளே,
நீ புதையப் புதைய, நம்பிக்கை என்னும்,
வளம் தூவிக்கொண்டே,
இருப்பேனடிப் பெண்ணே!!!
"நாம் வாழும் வரை"! "நீ வீறுகொள்ளும் வரை"!
உன் நாயகன்!!
். தௌபீஃக்