வாழ்க்கையில் வேகம்

வாழ்க்கையில் வேகம் தேவை
பிறருக்கு சமயத்தில் நம் உதவி சேர,
துரிதம் தேவை நீதி நிலை நாட்டிட, ,
குற்றம் அம்பலப்படுத்த,
குற்றம் செய்தோன் தண்டிக்கப்பட்டு ,
குற்றம் இழைக்கப்பட்டோன் நீதியின்
நிழலில் வாழ்ந்திட

வேகம் தவிர்த்திட வாழ்க்கையில் ,
பேசுகையில், அங்கு விவேகம் சேர்க்க;
நாவடக்கி பேச நலம் கூடும்
நண்பரோடு நல்ல நட்பும் கிட்டும்.

வேகம் தவிர்க்க சாலையில் நெடும்சாலையில்,
சொகுசு வண்டிகள் ஓட்டும்போது
வேகத்தால் கவனம் தவற
இன்னல்கள் வந்து சேரும்

வேகமாய் சிந்திப்பதில் தவறேதும் இல்லை
சிந்தித்ததை செயலாக்கும் போது
நிதானம் தேவை

முயல்போல் ஓடி என்ன பயன்,
வேகம் விவேகத்தை விழுங்கிவிடும்
கர்வத்தில் பாதி பந்தயத்தில் தூங்கிய
அந்த முயல் போல


நின்று நிதானமாய் செயல்பட ,அந்த
ஆமைபோல வெற்றி அடையலாம் இறுதியில் .

வேகம் தேவை ஆனால் வேகமே
வாழ்க்கை என்று எண்ணிவிட கூடாது.



.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jul-17, 1:19 pm)
Tanglish : vazhkkaiyil vegam
பார்வை : 144

மேலே