உயிரே என்னுயிரே

அன்புக்கு அரசி அவள்
பண்புள்ள பைங்கிளி அவள்
தன்குடும்பத்துக்கு குலவிளக்கவள்
ஏழைகளை இரக்கம் பார்ப்பவள்
பணம் என்றால் பதறி வெறுப்பவள்
அழகிலும் அவளுக்கு குறையில்லை
அறிவிலும் உயர்ந்தே நின்றவள்
பெண்ணுக்கு பெரும் பொருத்தமானவள்
வறுமை கண்டு துவளாதவள்
வாஞ்சையாய் வாரிக்கொடுப்பவள்
எத்தனை இன்னல்களையும் இடிதாங்கும் வானமாய் கொண்டவள்
என்னை வென்றவள் என் மனதை கொய்தவள்
நேர்மையாய் நீதியாய் நெறிவழி நடந்தவள்
சித்திரை பாவையாள் கொண்டவன் நெஞ்சிலே சிம்மாசனம் இட்டவள்
என்னவள் என் இரு கண்ணவள்
அணையா தீபமாய் என் மனையாள் ஜொலிப்பாள்
என நிஜமாய் நான் நினைத்ததது அது கனவாய் ஆனது
மெழுகாய் உருகிபோவதை என் மனதால் ஏற்க முடியலை
கடலாய் கண்ணீர் வருவதை அவள் முகம் கரையாய் வந்து தடுக்குதே
தினமும் நான் இறைவனை திடமாய் வரம் கேட்கிறேன்
விதியாய் வந்த வியாதியை விரைவாய் நீ தீர்த்திடு
உயிரே அவள் என்னுயிரே அதை மட்டும் கொடுத்திடு
அவளை திரும்ப கொடுத்திடு

அஸ்லா அலி

எழுதியவர் : aslaaali (31-Jul-17, 3:54 pm)
Tanglish : uyire ennuyire
பார்வை : 778

மேலே