வா என் இளையவனே
அன்பால் சாதித்து,
அறிவால் உயர வேண்டும்,
வானுயர வளர வேண்டும்,
ஊர்... உலகம் போற்ற
உன்னதமாய் வாழ்ந்திடவேண்டும்
கண்ணும்... கருத்துமாய் இருக்க வேண்டும்,
கல்லாதார் வார்த்தைகளுக்கே
பொறுக்க வேண்டும்,
அறிவுடை சான்றோர் நட்பை
அகத்தில் வை,
நரிக்குணம் படைத்தோர் நட்பை
நகத்தில் வை,
அறிவுசார் கருவூலத்தை
இல்லத்தில் வை,
பனித்துளியின் தூய்மையை
உள்ளத்தில் வை,
பாறையின் உறுதியை
உடலினில் வை,
மலர்களின் கணத்தை
வார்த்தைகளில் வை,
தேனீயின் குணத்தை
வாழ்க்கையில் வை,
காக்கையின் பழக்கத்தை
வழக்கத்தில் வை,
சேவல் போல் விழி...
எறும்பு போல் ஊரு...