வெற்றிக்கு அடித்தளமிடும் பயிற்சியே, விடாமுயற்சி
வகுப்பில் அனைவரும் படிக்கும் பாடம் பற்றிக் கதைத்தால் , கிரிக்கெட்டைப் பற்றிக் கதைப்பார்கள் அபியும், மணியும்...
கிரிக்கெட் மீது அவர்கள் கொண்ட காதல் அளப்பரியது...
அதிலும் மணிக்கு ரைனாயென்றால் கொள்ளைப் பிரியம்...
எந்த அளவிற்கென்றால் தனது பெயருடன் ரைனா பெயரை இணைத்து மணி ரைனா என்று வைத்துக் கொண்ட அளவிற்கு...
அபிக்குப் பிடித்தவர் டோனி...
இருவருக்கும் கிரிக்கெட் ஆசை வேரூன்றிடக் காரணமானவர் சச்சின்...
கிரிக்கெட்டில் எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் விட்டுவிடாமல் பற்றிக் கொள்வதில் அவர்களுடைய விடாமுயற்சியை என்னவென்று புகழ்வேன்?
படிப்பில் ஆர்வமில்லாமல் அரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கிரிக்கெட் விளையாடுவதைக் கைவிடார்...
ஏன்டா படிக்காமல் இப்படி விளையாட்டு விளையாட்டென்று திரிகிறீர்களே என்று நான் கேட்டால் மணி ரைனா சொல்லுவான் கிரிக்கெட் விளையாடத் தான்டா காலேஜ்க்கே வாறோமென்று புன்னகையுடன்...
வகுப்பு முடிந்ததும் கிரிக்கெட் பயிற்சியென்று அனுதினமும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி...
அம்முயற்சியில் அவர்கள் உடலில் ஏற்பட்ட காயங்கள் பல...
இருப்பினும் முயற்சியே அவர்களின் சுவாசம்...