பாரத் மாதா கீ ஜே

பாரத மகளின்
பாவாடை உருவி
பதாகை ஏற்றும்
பரதேசிக் கூட்டம்
"பாரத் மாதா கீ ஜே" என
பகட்டாக கூவுதடா..!

பார்த்தீனிய களைகளெல்லாம்
பாரதீயம் பேசுதடா..!
பகுத்தறிவு இல்லாத
பண்ணாடைகளுக்கெல்லாம்
பாங்குடனே ஓர் பட்டம்
"பண்பாட்டு காவலரென்று"

த்தூ...!

எழுதியவர் : அஞ்சா அரிமா (1-Aug-17, 5:33 pm)
சேர்த்தது : அஞ்சா அரிமா
பார்வை : 67

மேலே