தேவதைக்காரி உன்னை நினைவு படுத்தி

பௌணர்மி நிலவின் வெண்மை !
மடிகறந்த பசுவின் பாலின் தன்மை !

மொட்டவிழ்ந்த ரோஜா !
பனித்துளி தெறித்த ரோஜா !

பனித்துளி ஒன்றை தாங்கிய புல்!
நிசப்தம் நிறைந்த அல் !

சுட்டெரிக்கும் நண்பகல் கதிர் !
தலைசாய்ந்த அறுவடை கதிர் !

பனி படர்ந்த காலை !
அந்தி சாயும் மாலை !

மலர் விட்டு மலர் பறக்கும் பட்டாம்பூச்சி !
மலர் நுகர்ந்த வாசனை நுகர்ச்சி !

தேகம் தீண்டிய ஒற்றை மழைத்துளி !
பேனாவின் கடைசி மைத்துளி !

"தேவதைக்காரி "
உன்னை நினைவு படுத்தி
இதயத்தை மயிலிறகைபோல்
வருடிவிட்டுதான் போகும் !

எழுதியவர் : முபா (2-Aug-17, 6:27 pm)
பார்வை : 503

மேலே