என்னவனை நினைத்து
எனதருகில் நீ
இருப்பதுபோல் உணர்கிறேன்
அவ்வுணர்விலே தினசரி
நான் தொலைகிறேன்..
இப்படியே என்
காலமது நகர்ந்திடுமா?
இல்லை உன்
காலடித்தடம் தனை
கண்டுபிடித்திடுமா ,
தேடி வருவாயா
என்னை இப்படியே
தேட விடுவாயா??
இரவில் மட்டுந்தான்
வழித்துணையா ,
நீயென் இதயம் என்பது
இன்னமும் உனக்கு புரியலையா..
உறவே நீ
என்னைத் தேடி வந்துவிடு
என் தனிமைக்குக் கொஞ்சம்
இடைவேளை கொடு ...
விலகிடாத நினைவென ,
முடிந்திடாத கனவென
இதயம்தனில் வாழும் உயிரென
என்னை ஆளும் உணர்வென
காலம் தோறும்
எனைக்காக்கும் உறவென
நீங்கிடாது வாழ்ந்துவிட
வந்துவிடு என்
பயணமே.......
காதலுடன் காத்திருக்கிறேன்
என் பாதியே
உனக்காக.....